கிணற்றில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவி


கிணற்றில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவி
x
தினத்தந்தி 12 Feb 2022 6:55 AM IST (Updated: 12 Feb 2022 6:55 AM IST)
t-max-icont-min-icon

திருச்சூர் அருகே மர்மமான முறையில் கிணற்றுக்குள் இறந்து கிடந்த கல்லூரி மாணவி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலகுடா பகுதியை சேர்ந்த ஜோதி பிரகாஷ் என்பவரின் மகள் சந்தியா (19).
சந்தியா அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று காலை வீட்டில் படுத்திருந்த சந்தியாவை காணவில்லை. இதனை அறிந்த உறவினர்கள் சந்தியாவை அக்கம் பக்கம் தேடியும்  அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் வீட்டுக்கு அருகில் உள்ள  கிணற்றில் சந்தியா இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த  தீயணைப்பு வீரர்கள், கிணற்றுக்குள் கிடந்த மாணவியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 
மாணவி கிணற்றுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக திருச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story