உத்தரப்பிரதேச சட்டசபை தொகுதிக்கான 2ஆம் கட்ட தேர்தல்: பரப்புரை இன்றுடன் ஓய்கிறது
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தொகுதிக்கான 2ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது.
லக்னோ,
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபை 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. அதில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலில் சுமார் 60 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இதையடுத்து, 2-ம் கட்ட தேர்தல் வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளது. 7 கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்கி உள்ளன.
இந்நிலையில் 2ஆம் கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 55 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் களத்தில் 584 வேட்பாளர்கள் உள்ளனர். இதற்காக கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த பரப்புரை இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதிப்படுத்த மாநில காவல் துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவாவிலும் நாளை மறுநாள் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரையும் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story