திருப்பதியில் விண்கலம் மாதிரியை வைத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் சிறப்பு வழிபாடு
நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படும் ராக்கெட் மற்றும் விண்கலத்தின் மாதிரிகளுக்கு திருப்பதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருப்பதி,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்த மாதம் வரும் 14 ஆம் தேதி காலை 5.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ்-04 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்தியாவின் செயற்கைகோளுடன் மேலும் இரண்டு சிறிய செயற்கை கோள்களும் விண்ணில் செலுத்தப்பட இருக்கின்றன.
இந்நிலையில் பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட் மற்றும் இ.ஓ.எஸ்-04 விண்கலம் ஆகியவற்றின் மாதிரிகளுடன் திருப்பதி மலைக்கு வந்த இஸ்ரோ விஞ்ஞானிகள், வி.ஐ.பி. தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டனர். அப்போது ராக்கெட் மற்றும் விண்கலத்தின் மாதிரிகள் ஏழுமலையானின் திருவடிகளில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story