மே. வங்கத்தில் மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி இடையே வலுக்கும் மோதல்- கட்சி வட்டாரத்தில் பரபரப்பு


மே. வங்கத்தில் மம்தா பானர்ஜி - அபிஷேக் பானர்ஜி இடையே வலுக்கும் மோதல்- கட்சி வட்டாரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Feb 2022 9:43 PM IST (Updated: 12 Feb 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.

கொல்கத்தா,

திரிணமூல் காங்கிரசில் மம்தா பானர்ஜிக்கு அடுத்தப்படியாக அதிக அதிகாரம் கொண்ட தலைவராக வலம் வருபவர் அபிஷேக் பானர்ஜி. மம்தாவின் மைத்துனரான இவர், அக்கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். 

திரிணமூல் காங்கிரஸில் 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கொள்கையை  அறிமுகப்படுத்த  அபிஷேக் பானர்ஜி ஆர்வம் காட்டுகிறார். ஆனால், மம்தா பானர்ஜிக்கு இந்தக் கொள்கையில் சிறிதும் உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

இருந்தபோதிலும், கட்சியில் தனக்கு இருக்கும் ஆதரவாளர்களின் துணையுடன், இந்தக் கொள்கையை அபிஷேக் செயல்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் திரிணமூல் காங்கிரஸுக்கு அரசியல் ஆலோசனை வழங்கி வரும் ஐ-பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக அபிஷேக்குக்கு உதவி வருவதாக தெரிகிறது. இதற்கு, மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்களும், கட்சியின் மூத்த தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கடும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் 20 பேர் கொண்ட தேசிய செயற்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுவில் இடம் பெறும் நிர்வாகிகள் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 


Next Story