காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகளுக்கு பாதுகாப்பு குறைப்பு
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகளுக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரிகள் பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு குழுவின் (எஸ்.எஸ்.ஜி.) பாதுகாப்பு சமீபத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்-மந்திரிகளின் பயணத்தின்போது உடன் செல்லும் ‘ஜாமர்’ கருவி, ஆம்புலன்ஸ் வாகன வசதியும் திரும்பப் பெறப்படுகின்றன. பயங்கரவாதிகள் மறைத்துவைக்கும் வெடிகுண்டுகளை இயக்குவதற்கான சிக்னல்களை தடுப்பதற்கு ஜாமர் கருவியும், அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் ஆம்புலன்ஸ் வாகனமும் உதவுகின்றன. ஸ்ரீநகர் மாவட்டத்துக்குள் இந்த வசதிகள் முன்னாள் முதல்-மந்திரிகளுக்கு இனிமேல் கிடைக்காது.
அதேநேரம், அவர்கள் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும்போது ஜாமர் கருவியும், ஆம்புலன்ஸ் வாகனமும் எப்போதும்போல் உடன் செல்லும் என காஷ்மீர் யூனியன் பிரதேச அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீநகரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story