பிரதமர் மோடியுடன் கென்யா முன்னாள் பிரதமர் சந்திப்பு
ஓடிங்கா, நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
புதுடெல்லி,
கென்யா முன்னாள் பிரதமர் ஓடிங்கா, தனிப்பட்ட முறையில் நேற்று இந்தியா வந்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அப்போது, சுமார் மூன்றரை ஆண்டுகால இடைவெளிக்கு பின் ஓடிங்காவை சந்திப்பது குறித்த மகிழ்ச்சியை மோடி வெளியிட்டார்.
அவருடன் 2008-ம் ஆண்டு முதல் இந்தியாவிலும், கென்யாவிலும் தான் நடத்திய கலந்துரையாடல்களை மோடி நினைவுகூர்ந்தார். 2009, 2012-ம் ஆண்டுகளில் ‘துடிப்பான குஜராத்’ மாநாட்டுக்கு ஓடிங்கா அளித்த ஆதரவு குறித்தும் மோடி கூறினார்.
இரு தரப்பு நலன்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்கள் விவாதித்தனர். இந்திய-கென்ய உறவை மேலும் வலுப்படுத்துவதில் தான் கொண்டிருக்கும் உறுதியை மோடி வெளிப்படுத்தினார். மேலும், ஓடிங்காவின் நல்ல உடல்நலத்துக்கும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
Related Tags :
Next Story