3 மாநில சட்டசபைத் தேர்தல்: பிற்பகல் 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்..!


3 மாநில சட்டசபைத் தேர்தல்: பிற்பகல் 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்..!
x
தினத்தந்தி 14 Feb 2022 5:56 PM IST (Updated: 14 Feb 2022 6:18 PM IST)
t-max-icont-min-icon

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

லக்னோ,

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல், 403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. 

உத்தரபிரதேசம், கோவாவில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அதேவேளை, உத்தரகாண்டில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில்,
காலை 9 மணி நிலவரப்படி, 

கோவாவில் 11.04 சதவீத வாக்குகள்

உத்தரபிரதேசத்தில் 9.45 சதவீத வாக்குகள் 

உத்தரகாண்டில் 5.15 சதவீத வாக்குகள்  

காலை 11 மணி நிலவரப்படி, 

கோவாவில் 26.63 சதவீத வாக்குகள்

உத்தரபிரதேசத்தில் 23.03 சதவீத வாக்குகள்

உத்தரகாண்டில் 18.97 சதவீத வாக்குகள் 

நண்பகல் 1 மணி நிலவரப்படி, 

கோவாவில் 44.63 சதவீத வாக்குகள், 

உத்தரபிரதேசத்தில் 39.07 சதவீத வாக்குகள்

உத்தரகாண்டில் 35.21 சதவீத வாக்குகள் 

பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்;

 கோவாவில் 60.18 சதவீத வாக்குகள்

உத்தரகண்டில் 49.24 சதவீத வாக்குகள் 

உத்தரப் பிரதேசத்தில் 51.93 சதவீத வாக்குகள்  

மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்

கோவா; 75.29 சதவீத வாக்குகள்

உத்தரகாண்ட்; 59.37 சதவீத வாக்குகள்

உத்தர பிரதேசம்: 60.44 சதவீத வாக்குகள்


Next Story