மும்பையில் 2 மாதங்களுக்கு பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு..!
மும்பையில் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்தது. புதிதாக 192 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 1,966 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 12 பேர் பலியானார்கள். மாநிலத்தில் இதுவரை 78 லட்சத்து 44 ஆயிரத்து 915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 416 பேர் உயிரிழந்து உள்ளனர். மாநிலத்தில் தற்போது 36 ஆயிரத்து 447 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைநகர் மும்பையிலும் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்து உள்ளது. நேற்று நகரில் புதிதாக 192 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 2 மாதங்களுக்கு பிறகு நகரில் பதிவான குறைந்த பாதிப்பாகும். கடந்த டிசம்பர் 13-ந் தேதி நகரில் 174 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இதேபோல நகரில் மேலும் 2 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். நகரில் இதுவரை 10 லட்சத்து 54 ஆயிரத்து 242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 ஆயிரத்து 685 பேர் உயிரிழந்து உள்ளனர். நகரில் சீல்வைக்கப்பட்ட கட்டிடங்கள், கட்டுபாட்டு மண்டலங்கள் ஒன்றுகூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 1,691 ஆக உள்ளது. மாநிலத்தில் புதிதாக 8 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story