87 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது நபர்
87 வயது பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது நிரம்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் திலக் நகரில் 87 வயது நிரம்பிய பாட்டி (பெயர் வெளியிடப்படவில்லை) தனது மகளுடன் (வயது 65) வசித்து வந்தார்.
இந்நிலையில், அந்த பாட்டியின் மகள் நேற்று மதியம் 12 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி அருகே உள்ள சந்தைக்கு சென்றுள்ளார். பாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த 30 வயது நிரம்பிய நபர் தனியாக இருந்த பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், பாட்டியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்த செல்போன் உள்ளிட்ட சில பொருட்களையும் திருடி சென்றுள்ளார்.
சந்தைக்கு சென்ற பாட்டியின் மகள் வீட்டிற்கு வந்த போது தனது தாயார் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தாக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசில் பாட்டியின் மகள் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் வீட்டிற்கு சமையல் கேஸ் சிலிண்டர் கொடுக்க வந்த 30 வயது நிரம்பிய நபரே பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story