கால்நடை தீவன ஊழல் தொடர்பான 5-வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு


கால்நடை தீவன ஊழல் தொடர்பான  5-வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு
x
தினத்தந்தி 15 Feb 2022 2:36 PM IST (Updated: 15 Feb 2022 2:36 PM IST)
t-max-icont-min-icon

கால்நடை தீவன ஊழல் தொடர்புடைய மேலும் ஒரு வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது.

பாட்னா,

பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத்,  கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் ஏற்கனவே குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து தண்டனை வழங்கியது.  தற்போது உடல் நலக்குறைவு காரணமாக ஜாமீனில் உள்ள லாலு பிரசாத் யாதவ் மீது 5-வதாக ஒரு ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. 

தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ. 139 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதிலும், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.   இந்த வழக்கில் மொத்தம் 75 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  லாலு பிரசாத்  யாதவ் உள்பட 39 பேருக்கு வழங்கப்படும்  தண்டனை விவரங்களை பிப்ரவரி 18ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது.

மேலும் 35 குற்றவாளிகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் முன்னாள் எம்.பி ஜெகதீஷ் ஷர்மா மற்றும் அப்போதைய பொது கணக்கு குழு தலைவர் துருவ் பகவத் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். 


Next Story