குரு ரவிதாஸ் பிறந்தநாள்: டெல்லியில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் நாளை விடுமுறை...!
குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
குரு ரவிதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில், “சந்த் ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி மகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி அரசு பிப்ரவரி 16 புதன்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. மகாராஜ்ஜியின் பாதம் பணிந்து வணங்குகிறேன்” என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story