சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து; ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி


சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து; ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
x
தினத்தந்தி 16 Feb 2022 11:03 AM IST (Updated: 16 Feb 2022 11:46 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியாவை சேர்ந்தவர் ராம் ஜன்மா (28). அவரது மனைவி ஸ்வப்னா (28). இந்த தம்பதிக்கு ஆரியன் (8), யாஷ் (10).

இந்நிலையில், ராம் ஜன்மா தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என 6 பேர் நேற்று சூரத் நகருக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை சொந்த ஊரான அயோத்திக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

லக்னோ-அயோத்தியா தேசிய நெடுஞ்சாலையில் பரபன்கி மாவட்டம் ராம் ஷனிகி கட் என்ற பகுதியில்  இன்று அதிகாலை 3 மணியளவில் கார் வேகமாக வந்துகொண்டிருந்தது. அதிகாலை பனிமூட்டமாக இருந்ததால் அங்கு நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ராம் ஜன்மா அவது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என 6 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாலை நடந்த கார் விபத்தில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியின் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story