விவசாயிகளின் டிராக்டர் பேரணி கலவரம்: தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து விபத்தில் மரணம்


விவசாயிகளின் டிராக்டர் பேரணி கலவரம்: தூண்டியதாக  குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து விபத்தில் மரணம்
x
தினத்தந்தி 16 Feb 2022 12:07 PM IST (Updated: 16 Feb 2022 12:07 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் டிராக்டர் பேரணி கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட நடிகர் தீப் சித்து விபத்தில் மரணம் அடைந்தார்.

புதுடெல்லி

அரியானா மாநிலம் சோனிபட் அருகே நடந்த விபத்தில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து உயிரிழந்தார்.

நடிகர் தீப் சித்து டெல்லியில் இருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டாவுக்கு நேற்று இரவு காரில் சென்று கொண்டிருந்தார். குண்ட்லி-மனேசர்-பல்வால் (கேஎம்பி) எக்ஸ்பிரஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த  டிரெய்லர் மீது கார் மோதியது. 

இதில் தீப் சித்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கார்கோடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்று சித்து இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

2021 குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார் தீப் சித்து. அவரது முதல் பஞ்சாபி திரைப்படம் 'ராம்தா ஜோகி' 2015-ல் வெளியானது. தீப் சித்துவின் மறைவுக்கு பஞ்சாப் முதல்வர் சன்னி மற்றும் நடிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Next Story