ஓட்டலில் உணவு பரிமாறும் பட்டு சேலை ரோபோ சுந்தரி - வீடியோ
மைசூருவில் பிரபலமான ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ரோபோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு,
இன்றைய நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித வேலைப்பாடுகள் குறைந்து மின்சாதன பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. மனித உருவ வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணியாற்றி வருகின்றன.
அந்த வகையில் மைசூருவில் பிரபலமான சித்தார்த்தா ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ரோபோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரோபோ சுந்தரி என்று பெயரிடப்பட்ட பெண் உருவம் கொண்ட இந்த ரோபோ பாரம்பரிய மைசூர் பட்டுப் புடவையில் பொட்டு, நெக்லஸ் மற்றும் வளையல்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ பேட்டரியில் இயங்குகிறது, இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை வேலை செய்யக்கூடியது. என்னதான் அறிவியல் வளர்ச்சி பிரமிக்கவைத்தாலும், நாம் கேட்டதும் கொண்டு வரும் ஓட்டல் ஊழியர்கள் போல் ரோபோவால் ஓடி வர முடியாது என்றும், இன்முகத்துடன் வரவேற்கும் ஓட்டல் ஊழியர்கள் உணவு பரிமாற இல்லாதது ஒரு குறையாக உள்ளது என்று அங்கு வந்த வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஓட்டல் நிர்வாகத்தினர் இந்த ரோபோவை ரூ.2.50 லட்சத்திற்கு வாங்கியதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story