"இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உயரும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்


இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உயரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 18 Feb 2022 3:17 PM IST (Updated: 18 Feb 2022 3:17 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வரும் பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்த குளிர்காலத்தில் மட்டும் பிப்ரவரி 16 வரை சராசரி மழைப்பொழிவை விட 61.6 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தரைக்காற்று 25 முதல் 35 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப நிலை உயர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Next Story