பீகார் ரெயில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்படுமென கிழக்கு மத்திய ரெயில்வே அறிவிப்பு
பீகாரில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என கிழக்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
மதுபானி,
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மதுபானி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்வதந்தரதா சேனானி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தானது ரெயிலின் 5 பெட்டிகளில் பரவியதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், ரெயிலின் ஒரு பெட்டி மட்டுமே தீப்பிடித்தது என்றும், ஒரு மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் கிழக்கு மத்திய ரயில்வே தெரிவித்தது. ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்று கிழக்கு மத்திய ரயில்வே (ஈசிஆர்) தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story