காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 19 Feb 2022 8:04 PM IST (Updated: 19 Feb 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.


சோபியான்,


ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ஜைனபோரா பகுதியில் செர்மார்க் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே இன்று துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த என்கவுண்ட்டரில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.  அவர்கள் சந்தோஷ் யாதவ் மற்றும் சவான் ரோமித் தனாஜி என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று மோதலில் ஒரு பயங்கரவாதியையும் வீரர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.


Next Story