40 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம்..! பிரதமர் மோடி வாழ்த்து

40 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம்..! பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 20 Feb 2022 10:23 AM IST (Updated: 20 Feb 2022 10:23 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஒ.சி) கூட்டம் அடுத்த ஆண்டு (2023) மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஒ.சி) கூட்டம் அடுத்த ஆண்டு (2023) மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் 139-வது ஐஓசியின் இந்த ஆண்டிற்கான கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய சார்பில் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபிநவ் பிந்தரா, ஐஓசி உறுப்பினர் நீடா அம்பானி, ஐஓஏ தலைவர் நரிந்தர் பத்ரா, மத்திய இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் பங்கேற்றனர். நேற்று நடந்த ஐ.ஒ.சி.கூட்டத்தில் உறுப்பினர்கள் ஒருமனதாக அளித்த வாக்குகள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

இதனையடுத்து 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் 2வது முறையாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, ‘சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கூட்டத்தை நடத்த இந்தியா தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மறக்க முடியாத ஒலிம்பிக் கமிட்டி கூட்டமாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story