திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவில் பங்குனி உத்திரப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவாரூர்,
திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமி கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக விளங்குகின்றது. கோவிலின் பேரை சென்னதும் முதலில் அனைவருக்கும் நினைவிற்கு வருவது தேரோட்டம் தான். காரணம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக காணப்படும் தியாகராஜர் கோவில் தேரின் எடை சுமார் 300 டன் ஆகும். இந்த தேர் சுவாமி அம்பாலுடன் வீதி உலா வரும் போது விண்ணுக்கும் மண்ணும் உயர்ந்து காணப்படும்.
இத்தகைய பிரம்மாண்ட தேரோட்டத்தையே நாம் ஆழித்தேரோட்டம் என்று அழைத்து வருகின்றோம். இந்த சிறப்பு மிக்க திருவிழா கொரோனாவின் தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைப்பட்டது.
தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழ் நாடு அரசு அறிவித்து வருகின்றது. இந்த தளர்வுகளின் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் வழிபடவும்,குடமுழுக்கு நடத்தவும் இருந்த தடை அகன்றது. இதனால் குறிப்பிட்ட காலத்துக்குள் பல கோவில்களில் குடமுழுக்கு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த வகையில் ஆழித்தேரோட்டம் நடத்த தடையாக இருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளும் குறைந்து உள்ளதால், தேரோட்டத்தை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இதே போன்று இந்த சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை இந்த ஆண்டு கண்டிப்பாக நடத்தப்படும் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து ஆழித்தேரோட்டத்திற்கான ஏற்ப்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மும்முறமாக செய்துவந்தனர்.
இந்த நிலையில் மார்ச் 15-ம் தேதி ஆயில்ய நட்சத்திரத்தில் பங்குனி முதல் நாளில் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் விழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இதில் கோவில் கொடி மரத்தில் பங்குனி திருவிழாவிற்கான கொடி ஏற்ப்பட்டது. கொடியேற்றத்தை தொடர்ந்து சுவாமி அம்மாள் பிரகார வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனாவின் தாக்கம் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள ஆழித்தேரோட்டத்தினை காண்பதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விழாவிற்கா முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் விரைந்து செயல்படுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story