அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் - ராகுல் காந்தி
மக்களை ஆதரிப்பவர்களுக்கும் அச்சமின்றி பதில் கூறுபவர்களுக்கும் உங்கள் வாக்குகளை செலுத்துவீர் என ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலத்தில் , இன்று மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, உ.பி.யில் 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல, முதல்-மந்திரி சரண்ஜித்சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிற பஞ்சாப் மாநிலத்தில் 117 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், இருமாநில தேர்தலில் பொதுமக்கள் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றுவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “உங்கள் வாக்குகளை மக்களை ஆதரிப்பவர்களுக்கு வழங்குங்கள், அச்சமின்றி பதில் கூறுபவர்களுக்கு வாக்களியுங்கள். பஞ்சாபின் நிலையான எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள்.
वोट उत्तर प्रदेश में पड़ेगा,
— Rahul Gandhi (@RahulGandhi) February 20, 2022
बदलाव देशभर में आएगा!
शांति और प्रगति के लिए वोट दें- नयी सरकार बनेगी तो नया भविष्य बनेगा।
நீங்கள் அளிக்கும் வாக்குகள் வாக்குகள் உத்தரபிரதேசத்தில் செலுத்தப்பட்டாலும், அதனால் ஒட்டுமொத்த தேசத்திலும் மாற்றம் ஏற்படும்.
அமைதி மற்றும் மேம்பாடுக்காக வாக்களியுங்கள். புதிய அரசாங்கம் அமையும் போது புதிய எதிர்காலம் அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
वोट उत्तर प्रदेश में पड़ेगा,
— Rahul Gandhi (@RahulGandhi) February 20, 2022
बदलाव देशभर में आएगा!
शांति और प्रगति के लिए वोट दें- नयी सरकार बनेगी तो नया भविष्य बनेगा।
Related Tags :
Next Story