தேர்தலில் பாஜக பெரும் தோல்வி அடையும் - வாக்களித்த பின் அகிலேஷ் யாதவ் பேட்டி
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஜஸ்வந்த் நகரில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில் வாக்களித்தார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இன்று 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் தேர்தலில் பாஜக பெரும் தோல்வி அடையும் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
ஜஸ்வந்த் நகரில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில் வாக்களித்த பின்னர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெரும் தோல்வி அடையும். உத்தரப்பிரதேச விவசாயிகள் பாஜகவை மன்னிக்க மாட்டார்கள்.
முதல் இரண்டு கட்ட தேர்தலில் நாங்கள் சதம் அடித்துள்ளோம். இந்த 3-ம் கட்ட தேர்தலிலும் சமாஜ்வாடி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து கட்சிகளையும் விட முன்னணியில் இருக்கும்' என்று கூறினார்.
Related Tags :
Next Story