காங்கிரஸுக்கு 20-30 இடங்களுக்கு மேல் கிடைக்காது - முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங்


காங்கிரஸுக்கு 20-30 இடங்களுக்கு மேல் கிடைக்காது - முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங்
x
தினத்தந்தி 20 Feb 2022 2:30 PM IST (Updated: 20 Feb 2022 2:30 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸுக்கு 20-30 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் கூறினார்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் 23 மாவட்டங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. இதில் 1304 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.14 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். பஞ்சாப் மக்கள் அனைவரும் காலையில் இருந்தே ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்குபதிவு குறித்து முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் கூறுகையில்,

மதியம் 1 மணி வரை 30%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி ஆகும். பாட்டியாலா மற்றும் அருகில் உள்ள தொகுதிகளில் நல்ல வெற்றியை காண்போம். பாஜக-பி.எல்.சி மற்றும் திந்த்சாவின் கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் போதும் வேறு என்ன வேண்டும்.

பஞ்சாபில் எங்கள் கட்சிக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளால் என்னால் என்ன சாதிக்க முடியும் என்பதில் காங்கிரஸ்காரர்கள் கவலைப்படுகிறார்கள். காங்கிரஸுக்கு 20-30 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்று என்னால் கணிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story