நிலையான பொருளாதார மீட்சியே மத்திய அரசின் விருப்பம்: நிர்மலா சீதாராமன்


நிலையான பொருளாதார மீட்சியே மத்திய அரசின் விருப்பம்: நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 22 Feb 2022 4:36 AM IST (Updated: 22 Feb 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

நிலையான பொருளாதார மீட்சியே மத்திய அரசின் விருப்பம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மும்பை, 

மும்பையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தொழில்துறையினருடன் பட்ஜெட்டுக்கு பிந்தைய உரையாடலில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர், “கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரம் மீண்டு வந்து கொண்டிருக்கும்போது இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நிலையான பொருளாதார மீட்சியையே மத்திய அரசு விரும்புகிறது. பொருளாதார மீட்சிக்கான அம்சங்கள், பட்ஜெட்டில் நிறைய உள்ளன. உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான செலவினங்கள், பொருளாதாரத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

கொரோனா காலத்தில், பொதுமக்களுக்கு பணம் அனுப்ப தொழில்நுட்பம் உதவிகரமாக அமைந்தது. கல்வி மற்றும் வேளாண்மை துறைகளிலும் மின்னணு தீர்வுகளை பயன்படுத்தி வருகிறோம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Next Story