நடுவானில் பறந்த போது பெங்களூரு விமானத்தில் திடீர் கோளாறு
விமானம் நடுவானில் பறந்த போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பெங்களூரு,
டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு வந்தது. அந்த விமானத்தில் 164 பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானம் நடுவானில் பறந்த போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் அந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த பயணிகள் இறங்கி சென்ற பின்னர் அந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பயணிகளுக்கு எந்தவிதமான அசவுகரியமும் ஏற்படவில்லை என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் கூறியுள்ளது.
Related Tags :
Next Story