மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 47 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 47 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 22 Feb 2022 10:18 PM IST (Updated: 22 Feb 2022 10:18 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இன்று மேலும் 1,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Maharashtra COVID19 Updates for today




மும்பை,

நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மராட்டிய மாநிலத்தில் கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. அதிலும் கடந்த சில நாட்களில் நோய் பாதிப்பு குறையும் வேகம் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 1,080 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,60,317 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,43,633 ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 2,488 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 76,99,623 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது வரை மாநிலத்தில் 13 ஆயிரத்து 070 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story