போலி பணி நியமன கடிதம் வழங்கும் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் - வருமான வரித்துறை எச்சரிக்கை
போலி பணி நியமன கடிதம் வழங்கும் மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி,
வருமான வரித்துறை ஒரு பொது அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வருமான வரித்துறை பணியில் சேருவதற்கான போலி பணி நியமன கடிதங்களை வழங்கி, சில மோசடி நபர்கள், வேலை தேடுவோரை ஏமாற்றி வருவதாக வருமான வரித்துறையின் கவனத்துக்கு தெரிய வந்துள்ளது. வருமான வரித்துறையில் குரூப் பி, குரூப் சி பணியிடங்கள் அனைத்தும் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) மூலம்தான் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுதொடர்பான விளம்பரம், எஸ்.எஸ்.சி. அல்லது வருமான வரித்துறை இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும். எனவே, மேற்கண்ட இணையதளங்களை தவிர, வேறு இணையதளங்களிலோ, மின்னணு தளங்களிலோ வெளியாகும் விளம்பரங்களை நம்ப வேண்டாம். போலி நியமன கடிதங்களை வழங்குபவர்களிடம் ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story