10, 12-ம் வகுப்புகளின்நேரடி பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
10, 12-ம் வகுப்புகளின்நேரடி பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., தேசிய திறந்தநிலை பள்ளி, மாநில கல்வி வாரியங்களின் 10, 12-ம் வகுப்புகளின் நேரடி பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய கோரி, குழந்தை நல ஆர்வலர் அனுபா ஸ்ரீவஸ்தவா சகாய் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதை அவசர மனுவாக விசாரிக்கக் கோரி வக்கீல் பிரசாந்த் பத்மநாபன் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று முன்தினம் முறையிட்டார். இந்த முறையீட்டை பரிசீலித்த தலைமை நீதிபதி இந்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் பட்டியலிட உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, வக்கீல் பிரசாந்த் பத்மநாபன் நேற்று முறையிட்டார். இதையேற்ற நீதிபதிகள், பொதுநல மனுவின் நகலை எதிர் மனுதாரரர்களுக்கு அளிக்க உத்தரவிட்டதுடன், பொதுநல மனுவை இன்று விசாரிக்கவும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து மனு மீது விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடக்க உள்ளது.
Related Tags :
Next Story