கர்நாடகா: பஜ்ரங்தள் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது


கர்நாடகா: பஜ்ரங்தள் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2022 5:32 PM IST (Updated: 23 Feb 2022 5:32 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் பஜ்ரங்கதள் பிரமுகர் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம், சிவமொக்கா நகரை சேர்ந்தவர் ஹர்ஷா(வயது 24). பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிலர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்தனர்.

இச்சம்பவம் சிவமொக்கா நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹர்ஷா கொலைக்கு கண்டனம் தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஒரு சில பகுதிகளில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது.

வன்முறையின் போது கடைகள், பஸ், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால், சிவமொக்கா நகரில் பதட்டம் அதிகரித்தது. பதட்டத்தை தணிக்க நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஹர்ஷா கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பஜ்ரங்தள் பிரமுகர் ஹர்ஷா கொலை வழக்கில் இன்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 

கைது செய்யப்பட்ட முகமது காஷிப், சையது நதீம், ஆசிஃபுல்லா கான், ரீஹன் கான், நீஹல் மற்றும் அப்துல் ஆஃப்னன் உள்பட 8 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story