மும்பையில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு போன் செய்து மிரட்டிய நபர் கைது..!


மும்பையில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு போன் செய்து மிரட்டிய நபர் கைது..!
x
தினத்தந்தி 24 Feb 2022 2:56 PM IST (Updated: 24 Feb 2022 2:56 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு போன் செய்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

இஸ்ரேல் தூதரகத்திற்கு போன் செய்து மிரட்டிய நபர் ஒருவரை மும்பையில் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் மாதூர் தீபக் மோகின் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 38.

அரியானா மாநிலம் குருகிராம் கிராமத்தைச் சேர்ந்த மாதூர், கடந்த ஒன்றரை மாதங்களாக மும்பையில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை மும்பையில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு போன் செய்த மாதூர், தகாத வார்த்தைகளால் திட்டி யூதர்களை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாதூரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. மாதூர் வெளிநாடு செல்ல விரும்பியதாகவும் பல நாடுகள் அவருக்கு விசா வழங்கு மறுத்துவிட்டதாகவும் இதனால் மாதூர் பல்வேறு நாடுகளின் தூதரகங்களுக்கும் போன் செய்து இவ்வாறு மிரட்டல் விடுத்து வந்ததும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story