ரஷியா- உக்ரைன் போர் விவகாரம்: இந்தியா நடுநிலை ;24 மணிநேர அவசர உதவி எண் அறிவிப்பு


ரஷியா- உக்ரைன் போர் விவகாரம்: இந்தியா நடுநிலை ;24 மணிநேர அவசர உதவி எண் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Feb 2022 3:48 PM IST (Updated: 24 Feb 2022 3:48 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் - ரஷியா விவகாரத்தில் நடுநிலை காப்பதாகவும், அமைதியான தீர்வு ஏற்படும் என நம்புவதாகவும் இந்தியா தெரிவித்துள்து.

புதுடெல்லி,

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.

இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார்.  உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.  தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷிய படைகளில் உக்ரைஅனின் பலவேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

ரஷியாவில் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரெயில் சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஆரம்பமாகிவிட்டதால், இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து, தொடர்ந்து விசாரித்து வருவதாக, மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் கதி என்ன.? - என்பது குறித்து அறிய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்திய வீரர்களை மீட்க சென்ற ஏர் இந்தியா விமானம் குண்டு வீச்சு காரணமாக  திரும்பி வந்து உள்ளது . இதனால் இந்தியர்களின் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர்  கூறியதாவது:-

ரஷியாவுடன் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது; உக்ரைன் நிலைமையை சீர்செய்ய ரஷிய அதிபர் புதின், உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெலென்ஸ்கியை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என கூறினார்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்காக 24 மணிநேர அவசர உதவி எண்ணை கிவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவித்து உள்ளது.

உக்ரைனில் தற்போதைய நிலைமை மிகவும் நிச்சயமற்றது; +380 997300428, +380 997300483 என்ற எண்ணை தொடரபு கொள்வதன் செய்வதன் மூலம் 24 மணிநேர அவசர உதவி பெறலாம்.  என கூறி உள்ளது.

இந்தியத் தூதரகம் இந்தியப் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில்எங்கிருந்தாலும் "அமைதியாகவும் பாதுகாப்பாகவும்" இருக்குமாறு ஒரு புதிய ஆலோசனையை வெளியிட்டது. "தயவுசெய்து அமைதியாக இருங்கள் மற்றும் நீங்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்பாக இருங்கள், அது உங்கள் வீடுகள், தங்கும் விடுதிகள், தங்குமிடங்கள் அல்லது போக்குவரத்தில் இருந்தாலும் சரி, கிவ்வுக்குப் பயணிக்கும் அனைவரும் தற்காலிகமாக அந்தந்த நகரங்களுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் ஆலோசனைகள் விரைவில் வெலீயிடப்படும் ,'' என்று அது மேலும் கூறி உள்ளது.

உக்ரைன் - ரஷியா விவகாரம் கவலை அளிப்பதாகவும், இந்த விவகாரத்தில் நடுநிலை காப்பதாகவும், அமைதியான தீர்வு ஏற்படும் என நம்புவதாகவும் இந்தியா தெரிவித்துள்து.

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்புக் குறித்துச் செய்தியாளர்களின் கேள்விக்கு வெளியுறவு இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் பதிலளித்தார். அப்போது உக்ரைன் - ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுநிலை காப்பதாகத் தெரிவித்தார். இந்தச் சிக்கலுக்கு அமைதியான தீர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பேசிய இந்திய பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைன் - ரஷிய விவகாரத்தால் அப்பகுதியில் அமைதியும் பாதுகாப்பும் சீர்குலைந்து விடும் எனக் கவலை தெரிவித்தார்.

உடனடியாகப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்றும், மேற்கொண்டு எந்த நடவடிக்கையிலும் இறங்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இருநாட்டு வெளியுறவு அதிகாரிகளின் தொடர்ச்சியான பேச்சுக்கள் மூலம் இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்றும் திருமூர்த்தி வலியுறுத்தினார்.



Next Story