மத்திய நிதி மந்திரியுடன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு


மத்திய நிதி மந்திரியுடன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு
x
தினத்தந்தி 24 Feb 2022 9:00 PM IST (Updated: 24 Feb 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சிகளுக்கான நிதி, நிவாரண நிதிகள், மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் தமிழகத்தின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கணக்குகளில் தமிழகத்துக்கான நிதிகள் நிலுவையில் உள்ளன. இந்த நிதிகளை இந்த நிதியாண்டிற்குள் விடுவிக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினர்.

டெல்லியில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்த பழனிவேல் தியாகராஜன், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள நிதிகள் விடுவிக்கப்பட்டால் அந்த தொகைகளை தமிழக அரசு அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் சேர்க்க முடியும் என தெரிவித்தார். 

இந்த நிதியாண்டில் நிலுவையில் உள்ள நிதிகள் விடுவிக்கப்படவில்லையானால், அந்த தொகைகளை அடுத்த பட்ஜெட்டில் தான் கணக்கில் சேர்க்க முடியும் என பழனிவேல் தியாகராஜன் விளக்கினார். தமிழகத்துக்கான திட்டங்களுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடுகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள விதிகளை மத்திய அரசு விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின்போது தமிழக நிதி அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனைகளில் பங்கேற்றனர்.

Next Story