உக்ரைன் போர்: ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியுடன் ஜெய்சங்கர் ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Feb 2022 4:48 AM IST (Updated: 25 Feb 2022 4:48 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் போர் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியுடன் மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி, 

ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றிய வெளி விவகாரத்துறை மற்றும் பாதுகாப்புத்துறைக்கான உயர்மட்ட பிரதிநிதி ஜோசப் போரெல் பாண்டலெஸ் நேற்று மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை தொலைபேசியில் அழைத்து பேசினார்.

அப்போது ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைனில் ஏற்பட்டுள்ள பேரிடர் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அத்துடன் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா எப்படி உதவ முடியும்? என்பது குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.

இந்த தகவலை ஜெய்சங்கர் பின்னர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

முன்னதாக உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பை நிறுத்துவதற்கு இந்தியா உதவ வேண்டும் என உக்ரைன் நாட்டு தூதர் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story