ஒடிசாவின் முன்னாள் முதல்-மந்திரி காலமானார்; தலைவர்கள் இரங்கல்


ஒடிசாவின் முன்னாள் முதல்-மந்திரி காலமானார்; தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 26 Feb 2022 7:03 AM IST (Updated: 26 Feb 2022 9:19 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் 2 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்த ஹேமநந்தா பிஸ்வால் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


புவனேஸ்வர்,



ஒடிசாவில் 2 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்த ஹேமநந்தா பிஸ்வால் நேற்று காலமானார்.  அவருக்கு வயது 82.  கடந்த 1989ம் ஆண்டு டிசம்பர் 7ந்தேதி முதல் 1990ம் ஆண்டு மார்ச் 5ந்தேதி வரையும், பின்பு கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 6ந்தேதி முதல் 2000ம் ஆண்டு மார்ச் 5ந்தேதி வரை என அவர் 2 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில், நிம்மோனியா பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  எனினும், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.  அவரது மறைவுக்கு ஒடிசா பிரதேச காங்கிரஸ் கமிட்டி இரங்கல் தெரிவித்து உள்ளது.  இதேபோன்று, ஒடிசாவின் முதல்-மந்திரி நவீன் பட்னாயக், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். 


Next Story