பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சினைகளை தீர்க்க ஒரே வழி: இந்தியா


பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சினைகளை தீர்க்க ஒரே வழி:  இந்தியா
x
தினத்தந்தி 26 Feb 2022 1:25 PM IST (Updated: 26 Feb 2022 1:25 PM IST)
t-max-icont-min-icon

மனித உயிர்களைப் பறிப்பது எந்தத் தீர்வையும் கொடுக்காது என ஐநாவுக்கான இந்திய தூதர் டி.எஸ் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜெனீவா,

ஐக்கிய நாடுகள் அவையில் ரஷியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. ரஷியாவுக்கு எதிராக 11 நாடுகள் தீர்மானத்தில் வாக்களித்த போதும், ரஷியா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை முறியடித்தது.  

ரஷிய  படைகள் உடனடியாக நிபந்தனையின்றி திரும்ப வேண்டும் என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில் 11 உறுப்பினர்கள் ஆதரவளிக்க சீனா, இந்தியா, யுஏஇ ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.

இந்த நிலையில், தீர்மானத்தில் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது குறித்து இந்திய பிரதிநிதி டி.எஸ் திருமூர்த்தி கூறியதாவது: பேச்சுவார்த்தை மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரே வழி. மனித உயிர்களைப் பறிப்பது எந்தத் தீர்வையும் கொடுக்காது.  ராஜ்ய  ரீதியிலான பேச்சுவார்த்தைகள் கைவிடப்பட்டதே தவறு. அதற்காக வருந்துகிறோம். மீண்டும் பேச்சுவார்த்தை பாதைக்கு திரும்புமாறு அனைத்துத் தரப்பையும் வலியுறுத்துகிறோம்.
பல்வேறு காரணங்களுக்காக இந்தியா இந்த தீர்மானத்தில் வாக்களிப்பதைத் தவிர்க்கிறது”என்றார். 


Next Story