நிலத்தகராறில் முதியவர் அடித்துக் கொலை..!


நிலத்தகராறில் முதியவர் அடித்துக் கொலை..!
x
தினத்தந்தி 28 Feb 2022 3:28 PM IST (Updated: 28 Feb 2022 3:28 PM IST)
t-max-icont-min-icon

பக்கத்துவீட்டாருடன் ஏற்பட்ட நிலத்தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கான்பூர்,

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தரம்சாலாவில் நிலத்தகராறில் முதியவர் ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கான்பூரின் தரம்சாலா பகுதியில் உள்ள பரன்டா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இறந்து போன முதியவரின் குடும்பத்துக்கும் பக்கத்து வீட்டில் இருந்த குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இருவீட்டாரும் சண்டை போட்டதை அடுத்து நேற்று இரவு ஒரு கும்பல் முதியவரின் வீட்டிற்குள் நுழைந்து அவரை கட்டையால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story