பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.33 லட்சம் கோடி - கடந்த ஆண்டை விட 18% அதிகம்
ஜி.எஸ்.டி செஸ் வரி வசூல் முதல் முறையாக 10 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், தொழிற்சாலை நடவடிக்கைகளும் கொரோனாவுக்கு முந்தைய கால கட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி வரி வசூலும் அதிகரித்து வருகின்றது.
கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூலான நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக வசூலாகி உள்ளது. இது முந்தைய ஆண்டின் பிப்ரவரி மாத வசூலை விட 18 சதவீதம் அதிகமாகும். கடந்த 2020-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 26 சதவீதம் அதிகமாகும்.
பிப்ரவரி 2022-ல் வசூலிக்கப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,33,026 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி ரூ.24,435 கோடி, மாநில ஜி.எஸ்.டி ரூ.30,779 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி ரூ.67,471 கோடி (ரூ. 33,837 கோடி வசூல் மற்றும் பொருட்கள் இறக்குமதி மூலம்) ரூ.10,340 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் சேகரிக்கப்பட்ட ரூ. 638 கோடி உட்பட) வசூல் ஆகும். ஜி.எஸ்.டி செஸ் வரி வசூல் முதல் முறையாக 10 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது.
Related Tags :
Next Story