ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: வேதாந்தாவின் மேல்முறையீடு 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை


ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: வேதாந்தாவின் மேல்முறையீடு 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
x
தினத்தந்தி 3 March 2022 7:52 AM IST (Updated: 3 March 2022 7:52 AM IST)
t-max-icont-min-icon

ஆலையை மீண்டும் திறக்க கோரும் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் மார்ச் 15-ந் தேதி விசாரிக்கப்படுகிறது.

புதுடெல்லி, 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வேதாந்தாவின் சார்பில் மூத்த வக்கீல் ஆரியமா சுந்தரம் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, மேல்முறையீட்டு மனு நீண்டகாலமாக விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

எனவே, வருகிற 15-ந் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ள இந்த மனுவை அன்றைய தேதியில் விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.

அந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரும் மேல்முறையீட்டு மனு மார்ச் 15-ந் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.


Next Story