உத்தரபிரதேச 6ம் கட்ட தேர்தல் : காலை 11 மணி நிலவரப்படி 21.79% வாக்குகள் பதிவு
உத்தரபிரதேச 6-வது கட்ட தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி 21.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மேலும் 2 கட்ட தேர்தல் மட்டுமே மீதமுள்ளது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 6-வது கட்டமாக நடைபெறும் 57 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உத்தரபிரதேச 6-வது கட்ட தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி 21.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
Related Tags :
Next Story