மணிப்பூர் 2-ம் கட்ட தேர்தல்: 1 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியீடு


மணிப்பூர் 2-ம் கட்ட தேர்தல்: 1 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியீடு
x
தினத்தந்தி 5 March 2022 3:07 PM IST (Updated: 5 March 2022 3:07 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூரில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

இம்பால்,

60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 38 தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 

இதற்கிடையில், எஞ்சிய 22 தொகுதிகளுக்கு இன்று 2-ம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மணிப்பூர் தேர்தலில் 1 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, மதியம் 1 மணி வரை 47.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் காலை 11 மணி நிலவரப்படி 28.20 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story