ஐதராபாத்தில் இருந்து பஸ்சில் ரூ.5 கோடி தங்கம், வெள்ளி கடத்தல் - தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் கைது


Image Courtesy: ANI
x
Image Courtesy: ANI
தினத்தந்தி 7 March 2022 3:20 AM IST (Updated: 7 March 2022 3:20 AM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத்தில் இருந்து பஸ்சில் ரூ.5 கோடி தங்கம், வெள்ளி கடத்திய தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கர்னூல்,

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பஞ்சலிங்கலா சோதனை சாவடியில் சிறப்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு தனியார் பஸ்சுக்குள் ஏறி சோதனையிட்டபோது, சூட்கேசுடன் பயணித்த 5 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. 

சூட்கேசை சோதனையிட்டபோது, உள்ளே 8¼ கிலோ தங்க நகைகளும், 28½ கிலோ வெள்ளி செங்கற்களும், ரூ.90 லட்சம் ரொக்கமும் இருந்தன. தங்கம், வெள்ளியின் மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.

சூட்கேஸ் வைத்திருந்த 5 பேரும் கோவையில் உள்ள நகைக்கடைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தங்கம், வெள்ளியை வினியோகிக்க கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்டதாக 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தை சேர்ந்த தேவராஜ், கோவையை சேர்ந்த செல்வராஜ், குமார் வேலு, முருகேசன், வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

Next Story