உக்ரைனில் இருந்து இதுவரை 18 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு


உக்ரைனில் இருந்து இதுவரை 18 ஆயிரம் இந்தியர்கள் மீட்பு
x
தினத்தந்தி 8 March 2022 9:38 PM IST (Updated: 8 March 2022 9:38 PM IST)
t-max-icont-min-icon

இதுவரை உக்ரைனில் இருந்து 18 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது


ரஷிய போரால் உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர்.

‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசின்  நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து உக்ரைன்வாழ் இந்தியர்களுடன் அடுத்தடுத்து விமானங்கள் இந்தியா வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் இதுவரை உக்ரைனில் இருந்து 18 ஆயிரம் இந்தியர்கள்   மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 

75 சிறப்பு பயணிகள் விமானங்கள் மூலம் 15,521 பேரும் ,  விமானப்படையின்12 விமானங்கள் மூலம் 2,467 பேரும் மீட்கப்பட்டுள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 

Next Story