நட்சத்திர ஓட்டலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கிரிக்கெட் சங்க தலைவர் மீது வழக்கு
பலாத்காரம் செய்ய முயன்றதாக பீகார் கிரிக்கெட் சங்க தலைவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பீகார் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திவாரி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக விளம்பர நிறுவனம் ஒன்றின் பெண் இயக்குனர் குற்றம் சாட்டியுள்ளார்.
பார்லிமென்ட் தெருவில் உள்ள போலீஸ் நிலையத்தில் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பீகார் கிரிக்கெட் அமைப்பின் செயல் தலைவர் ராகேஷ் திவாரி மீது பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்ணைத் தாக்கியது தொடர்பான பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புகாரில் கூறியிருப்பதாவது:-
முன்னதாக அந்த பெண் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பீகார் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு போட்டிக்கான விளம்பரப் பணியில் தனது நிறுவனத்தை இணைத்துக் கொண்டுள்ளார். ஆனால் பணி முடிந்த பிறகும் கிரிக்கெட் சங்கம் அவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை.
இதையடுத்து ஜூலை மாதம் 12-ந்தேதி ராகேஷ் திவாரி டெல்லியில் இருந்தபோது, அந்த ஊதியம் குறித்து நேரில் சென்று கேட்க அந்த பெண் முடிவு செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ராகேஷ் திவாரி ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார்.
இவ்வாறு அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story