ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: பைலட் உயிரிழப்பு


கோப்பு படம் (ஏ.என்.ஐ)
x
கோப்பு படம் (ஏ.என்.ஐ)
தினத்தந்தி 11 March 2022 2:54 PM IST (Updated: 11 March 2022 4:21 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் வடக்கு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை அழைத்து வர ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. இந்த ஹெலிகாப்டர் குரேஸ் செக்டார் பகுதியில் தரையிறங்கும் போது விலகிச்சென்று விபத்துக்குள்ளானது. 

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்தில் ஒரு பைலட் உயிரிழந்தார். மேலும் ஒரு பைலட் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.  

Next Story