4 மாநில தேர்தல் வெற்றிக்கு பாஜக அரசின் பரிசே பி.எஃப் வட்டி விகிதம் குறைப்பு - காங்கிரஸ் விமர்சனம்


4 மாநில தேர்தல் வெற்றிக்கு பாஜக அரசின் பரிசே பி.எஃப் வட்டி விகிதம் குறைப்பு - காங்கிரஸ் விமர்சனம்
x
தினத்தந்தி 12 March 2022 7:08 PM IST (Updated: 12 March 2022 7:08 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக மிகவும் குறைவாக பி. எப் மீதான வட்டி விகிதம் 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

புதுடெல்லி,

2021-22 ம் நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50%-ல் இருந்து 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இன்று அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற 230-வது மத்திய வாரிய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 

1977-78 கால கட்டத்திற்கு பின் மிக குறைந்த வட்டி விகிதமாக இது பார்க்கப்படுகிறது. அப்போதைய வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்ததே மிக குறைந்த வட்டி விகிதம் ஆகும். இந்த முடிவு 5 கோடிக்கும் அதிகமான பி.எப் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 4 மாநில தேர்தல் வெற்றிக்கு பாஜக அரசின் பரிசே பி.எஃப் வட்டி விகிதம் குறைப்பு என காங்கிரஸ் சாடியுள்ளது. 

Next Story