காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிப்பார்: நிர்வாகிகள் தகவல்
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடர்வார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
புதுடெல்லி
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிறகு டெல்லியில் முதல்முறையாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்தக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று உள்ளது.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடர்வார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே எங்களை வழிநடத்துவார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பார். சோனியா காந்தியின் தலைமை மீது அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளோம்” என்றார்.
மற்றொரு மூத்த தலைவரான தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “ சோனியா காந்தி கட்சியின் தலைவராக நீடிப்பார். 5 மாநில தேர்தல் தொடர்பாக விரிவாக ஆலோசித்தோம். இந்த விவகாரங்களை எப்படி முன்னெடுத்துச் செல்வது, வரவுள்ள தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசித்தோம்” என்றார்.
Related Tags :
Next Story