ஏர் இந்தியா தலைவராக என்.சந்திரசேகரன் நியமனம்
டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் ஏர் இந்தியாவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. இதையடுத்து, துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்ட இல்கர் அய்சி என்பவரை ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக டாடா குழுமம் நியமித்துள்ளது.
ஆனால், இல்கர் அய்சி துருக்கி அதிபர் எர்டோகனுக்கு நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனால், இல்கர் அய்சியின் பின்னணி குறித்து மத்திய அரசு விசாரணை மேற்கொள்ளத்தொடங்கியது.
இதனையடுத்து, சர்ச்சைகள் எழுந்த நிலையில் ஏர் இந்தியாவில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்ற டாடா குழுமம் விடுத்த அழைப்பை இல்கர் அய்சி மறுத்துவிட்டார்.
இந்நிலையில், டாடா குழுமத்தின் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திர சேகரன் ஏர் இந்தியாவின் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
என். சந்திரசேகரன் தமிழ்நாட்டின் நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில் பிறந்தவர். இவர் திருச்சியில் பொறியியல் கல்லூரியில் எம்.சி.ஏ., பட்டம் பெற்றவர் ஆவார்.
Related Tags :
Next Story