வெப்ப நிலை அதிகரிப்பு: தெலுங்கானாவில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவிப்பு


Image courtesy: ANI
x
Image courtesy: ANI
தினத்தந்தி 14 March 2022 7:01 PM IST (Updated: 14 March 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

நடப்பு பருவ கல்வி ஆண்டு (2021-2022) முடியும் வரை பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

ஐதராபாத்,

வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக நாளை முதல் தெலுங்கானாவில் பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என அந்த மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தெலுங்கானா மாநிலத்தில் வெப்பம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. கோடை விடுமுறை வருவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இந்த ஆண்டின் இறுதி பருவ தேர்வு விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் நடப்பு பருவ கல்வி ஆண்டு (2021-2022) முடியும் வரை பள்ளிகள் அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story