ஹிஜாப் வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது கர்நாடக ஐகோர்ட்டு
ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு நாளை தீர்ப்பளிக்கிறது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டத்தை தொடங்கினார்கள்.
அதன்பிறகு, ஹிஜாப் விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதே நேரத்தில் ஹிஜாப் அணிய தடை விதித்திருப்பதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்பு கடந்த மாதம் தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.
அதன் பிறகு விசாரணை முடிந்து தீர்ப்பை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. இந்த நிலையில் ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு நாளை தீர்ப்பளிக்கிறது.
Related Tags :
Next Story