பஞ்சாப்பை தொடர்ந்து மேற்கு வங்காளத்தை குறிவைக்கும் ஆம் ஆத்மி- பஞ்சாயத்து தேர்தலில் போட்டி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 March 2022 10:07 PM IST (Updated: 14 March 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

2023 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள பஞ்சாயத்துத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட உள்ளது.

கொல்கத்தா,

உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர்,  கோவா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதன் முடிவுகள் கடந்த 10-ஆம் தேதி வெளியானது. 

பஞ்சாப் மாநிலத்தை தவிர பிற மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது . பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆம் ஆத்மி 92 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ள பஞ்சாயத்துத் தேர்தலில் ஆம் ஆத்மி  போட்டியிட உள்ளது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் மேற்கு வங்காள பொறுப்பாளர் சஞ்சய் பாசு கூறும் போது, "2023-ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடைபெறவுள்ள பஞ்சாயத்துத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும். கட்சி உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், ஏற்கனவே எங்கள் கட்சியினர் மார்ச் 13 அன்று கொல்கத்தாவில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர் " என தெரிவித்து உள்ளார்.

தற்போது மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்
காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் நிலையில் ஆம் ஆத்மி மேற்கு வங்காள பஞ்சாயத்துத் தேர்தலை குறிவைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story