ஹோலி பண்டிகையையொட்டி நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை!


ஹோலி பண்டிகையையொட்டி நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை!
x
தினத்தந்தி 15 March 2022 1:24 PM IST (Updated: 15 March 2022 1:24 PM IST)
t-max-icont-min-icon

மார்ச் 17 தொடங்கி மார்ச் 20 வரை தொடர்ந்து 4 நாட்கள் நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் விடுமுறையாகும்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளும் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றன.

முன்னதாக மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்கியதும், மாநிலங்களவை உறுப்பினர்களான நபின் சந்திரா பராகொஹைன், ராகுல் பஜாஜ், பேராசிரியர் டிபி சட்டோபாத்யாயா மற்றும் யட்லாபடி வெங்கட் ராவ் ஆகியோர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் கூட்டத்தொடர் விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது பேசிய மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு, ஹோலி பண்டிகையையொட்டி, மார்ச் 17 மற்றும் மார்ச் 18 ஆகிய இரு நாட்கள் மாநிலங்களவை கூட்டத்தொடருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றார். 

அதேபோல, மக்களவை கூட்டத்தொடருக்கும் மேற்கண்ட நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 19 மற்றும் மார்ச் 20 ஆகிய தேதிகள் வார இறுதி நாட்களால் என்பதால், மார்ச் 17 தொடங்கி மார்ச் 20 வரை தொடர்ந்து 4 நாட்கள் நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் விடுமுறையாகும்.

Next Story